பிக்பாஸ் சீசன் 6- ல் கமல் வாங்கியது இத்தனை கோடிகளா.? வாய்பிளக்கும் திரையுலகம்.!  - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி துவங்கியது. இந்த 6-வது சீசனையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கியுள்ளார். 

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் இறுதி 5 போட்டியாளர்களாக அசீம், அமுதவாணன், மைனா நந்தினி, ஷிவின், விக்ரமன் ஆகியோர் நீடித்தனர். 

இதில் மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அமுதவாணன் பணப்பெட்டியுடன் வீட்டிலிருந்து வெளியேறினார். இறுதியாக அசீம், ஷிவின், விக்ரமன், உள்ளிட்ட மூன்று பேரில் அசீம் வெற்றியாராக அறிவிக்கப்பட்டார். 

இந்த நிலையில், நடிகர் கமல் பிக் பாஸ் சீசன் 6 ல் வாங்கிய சம்பளம் பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது. 106 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமலஹாசன் ஒரு வாரத்திற்கு ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. 

அப்படி எனில் மொத்தம் 75 கோடிகள் அவர் சம்பளமாக வாங்கியுள்ளாராம். கடந்த வருடத்தை காட்டியும் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக கமலஹாசன் பெற்ற சம்பளம் 20 கோடிகள் அதிகம் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal salary In BB 6


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->