சாண்டியின் முன்னாள் காதலியுடன் கட்டிப்பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்த பிக்பாஸ் வனிதா.!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். இருந்தாலும், அவரது நடிப்பு அவருக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. திருமணம் குழந்தைகள் என்று குடும்பத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். 

நீண்ட நாட்களாக திரைத்துறையில் தலைகாட்டாமல் இருந்த வனிதா பிக் பாஸ் சீசன் 3-இல் கலந்து கொண்டு பலரது கவனத்தையும் பெற்றார். தொடர்ந்து, பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டு பிரிந்து விட்டதாக பல்வேறு செய்திகள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. பின்னர் விஜய்டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் வனிதாவை காணமுடிந்தது. 

மீண்டும் கல்யாண களையுடன் வனிதா விஜயகுமார்.?! அவரே வெளியிட்ட வீடியோ.! -  Seithipunal

இத்தகைய சூழலில் இயக்குனர் தாசன் இயக்குகின்ற புதிய படத்தில் நடிகை வனிதா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியது. ஹீரோயினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக வனிதா நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு அனல் காற்று என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

நகைச்சுவை நடிகரான கருணாகரன் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சமூகவலைதளங்களில் பிசியாக இருக்கும் வனிதா சேண்டி மாஸ்டரின் முன்னாள் காதலி காஜல் பசுபதியுடன் கட்டிப்பிடித்துக்கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kajal pasupathi is with vanitha vijayakumar 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->