இந்தியாவிற்கு வரும் Justice beiber.. இசைக் கச்சேரி அறிவிப்பால் ரசிகர்கள் கொண்டாட்டம்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் தனது பாப் பாடல்களின் மூலம் பிரபலமானவர் தான் ஜஸ்டின் பீபர். இவருக்கு உலகம் முழுவதும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். 28 வயதாகும் நிலையில் அவர் தயாரானபோது அவருக்கு அரிய வகை நோய் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால், அவரது முகம் ஒருபக்கம் செயலிழந்து போனது இதுகுறித்து சமீபத்தில் அவர் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் பார்த்து மிகுந்த வேதனை அடைந்தனர். இந்த நோய் தாக்குதல் காரணமாக கனடாவில் நடந்த நிகழ்ச்சியை அவர் ரத்து செய்தார்.

பின், சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் குணமடைந்து மீண்டும் இசை பணிகளை துவங்கி இருக்கிறார். இத்தகைய நிலையில், அவரது இசை நிகழ்ச்சி இந்தியாவில் நடைபெற இருக்கிறது. 

வரும் அக்டோபர் 19ஆம் தேதி அவர் இந்தியா வரவுள்ள நிலையில் டெல்லியில் இருக்கும் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இசை கச்சேரி நடைபெற இருக்கிறது. டிக்கெட் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது ஜஸ்டின் பீபரின் இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Justin Bieber may comes India


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->