ஜெயம் ரவியின் 'தனிஒருவன் 2' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. வீடியோ வெளியிட்ட படக்குழு.! - Seithipunal
Seithipunal


ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவன் 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 2005ஆம் ஆண்டு இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் ரிலீஸான 'தனி ஒருவன்' திரைப்படம் திரையரங்களில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக அரவிந்த்சாமியும் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த நிலையில், ஹிப் ஹாப் ஆதி இசை அமைத்திருந்தார். வெறும் 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 100 கோடி வரை வசூல் சாதனை படைத்தது.

இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதியுடன் தனி ஒருவன் திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து அன்றைய தினம் தனி ஒருவன் 2 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது. 

இந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த படத்தின் இயக்குனர் மோகன் ராஜா மற்றும் நடிகர் ஜெயம் ரவி இருவரும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி தனிஒருவன் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayam ravi in thanioruvan 2 update video viral


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->