ஜெயம் ரவியின் பூமி... பூமிக்கான திரைப்படம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் பூமி. இந்த படத்தின் கதையை சுருங்க கூற வேண்டும் என்றால், " நமது நாட்டின் வளத்தை இனியும் பாதுகாக்க தவறினால், விரைவில் பாலைவனப்பகுதியாகவும் மாறலாம் " என்பதை கூறியுள்ளனர். 

அமெரிக்காவின் நாசாவிலேயே பணியாற்றி வந்தாலும், உள்ளூரில் அரசியல்வாதி மத்தியில் அவருக்கு என்ன விதமான மதிப்பு கொடுப்பார்கள் என்பதை தெளிவாக கூறிவிட்டார்கள். ஆட்சியாளர்களும், அதிகாரவர்தாக்களும் கார்ப்பரேட் உலகத்திற்கு எப்படி ஒத்துழைக்கிறார்கள் என்பதும் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. 

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்று கூறினாலும், இந்தியாவில் விவசாயிகளின் நிலைமை எப்படி இருக்கிறது என்பது பெரும் கேள்விக்குறியாகத்தான் அமைகிறது. இயல்பான அளவை விட அதிக மழை என்று வானிலை அறிக்கை வந்தாலும், நீர் எங்கே என்று தேடினால் கடலை காண்பிக்கும் சூழ்நிலைதான் இன்றும் உள்ளது. 

பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டி, இன்னும் அணைகளின் எண்ணிக்கையை வெகுவாக அதிகரித்தால் நாடு வளம்பெறும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.. ஏன், தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் தாமிரபரணி ஆறு சில மாதங்களுக்கு உள்ளாகவே நீர் வரத்து இயல்பை மழையின்மையால் குறைத்தாலும், அதிக அணைகள் இல்லாததால் நீரை அதிகம் தேக்கி வைக்க இயலாத சூழலும் ஏற்படுகிறது. 

விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் சில படங்கள் வரும் போதுதான், விவசாயிகளை பற்றி சிலர் சிந்திக்கும் எண்ணமே ஏற்படுகிறது என்பதுதான் நிகழ்கால உண்மை. கார்ப்பரேட்டிற்கு மக்கள் விடையளிக்கும் காலம் வந்து, உள்ளூர் மற்றும் உள்நாட்டு பொருட்களுக்கு மக்கள் வாய்ப்பளிக்கும் போது மாற்றம் கட்டாயம் ஏற்படும் என்பதே பூமி திரைப்படம்... பூமிக்கான திரைப்படம். 

ஏற்கனவே பல படங்கள் விவசாயிகள் தொடர்பாக வெளியாகிருந்தாலும், இயக்குனர் லக்ஷ்மன் புதிய கோணத்தில் படத்தை உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஏன் திரையரங்கில் வெளியாகவில்லை என்பதே பலருக்கும் வருத்தம். முன்னணி நடிகர்கள் நடித்த படம் திரையரங்கில் வெளியாகும் சூழ்நிலை இருந்தால், பொறுத்து திரைப்படத்தை வெளியிட்டு இருக்கலாம். 

முன்னணி நடிகர் ஒருவர் படத்திற்கு சென்று மண்டை காய்ந்து வருவதை விட, திரைப்பட குழுவின் முடிவால் ஓ.டி.டி தலத்தில் வெளியான பூமியை பார்த்துவிட்டு செல்லலாம். இதனைப்போன்று குடும்ப பின்னணியின் குல தெய்வங்களை முன்னிறுத்தி வெளியாகியுள்ள ஈஸ்வரன் படமும் நன்றாக உள்ளது என்று கூறுகிறார்கள் திரை விரும்பிகள்.. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayam Ravi Bhoomi Movie is Worth Movie to View


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->