தல தல தான்பா! போலீஸ் ஐபிஎஸ் அதிகாரியின் டிவிட்! நெகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


 

ரசிகர்களால் 'தல' என்று செல்லமாக அழைக்கப்படும் ஹேண்ட்ஸம் ஹீரோ நடிகர் அஜித்குமார், அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன் பின்னர் ஆசை, காதல் கோட்டை, காதல் மன்னன், அமர்க்களம், முகவரி, தீனா, வில்லன் என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து, தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடித்தார் நடிகர் அஜித்.

என்னுடைய பணி நடிப்பது நடிப்பது மட்டுமே என்று பொது நிகழ்ச்சிகளை தவிர்க்கத் தொடங்கிய நடிகர் அஜித், தன்னுடைய ரசிகர் மன்றத்தையும் கலைத்துவிட்டு, ரசிகர்கள் குடும்பத்தை கவனியுங்கள், நான் நடிகன் மட்டும் தான் என்று தெள்ள தெளிவாக அறிவித்த ஒரே தமிழ் நடிகர் என்பது அஜித்தின் தனி சிறப்பு.

என்னதான் நடிகர் அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தாலும், அவருக்கான ரசிகர்கள் ஒரு சதவீதம் கூட குறையவில்லை. இப்போதும் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

ஒரு நடிகராக மட்டுமல்லாமல் பைக் ரேஸில் அதிக ஈடுபாடு உடைய நடிகர் அஜித், அவ்வப்போது தனது பைக்கை எடுத்துக் கொண்டு உலகத்தை சுற்றிவர ஆரம்பித்து விடுவார். தற்போது கூட வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், இன்று நடிகர் அஜித் ஹெல்மெட் உடன் போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை, போலீஸ் ஐபிஎஸ் அதிகாரி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார்.

அவரின் அந்த பதிவில், "இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது தலைக்கவசம் அணிந்து பாதுகாப்பாக செல்லுங்கள். தலைக்கவசம் உங்கள் உயிர் கவசம்" என்று ஐபிஎஸ் அதிகாரி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக ஒரு நல்ல விஷயத்தை, விழிப்புணர்வை திரைப்பட நடிகர்கள் மூலமாக, திரைப்பட காட்சிகள் மூலமாக காவல்துறையினர் விழிப்புணர்வு மேற்கொண்டு வரும் நிலையில், நடிகர் அஜித்தின் வைரலான இந்த புகைப்படத்தை ஐபிஎஸ் அதிகாரி ஸ்டாலின் பகிர்ந்து, தலைக்கவசம் அணியுங்கள் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPS police Officer share ajithkumar pic


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->