கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்.! - Seithipunal
Seithipunal


கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' படத்தை இயக்குனர் சங்கர் இயக்கி வந்த நிலையில், கிரேன் விபத்து ஏற்பட்டதன் காரணமாக கடந்த 2020இல் இந்த படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது. பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் சங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர்.

'விக்ரம்' பட வெற்றிக்குப் பிறகு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், இந்தியன்-2 நிச்சயம் தொடங்கும்' என தெரிவித்திருந்தார். மேலும், இந்த படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட காஜல் அகர்வால் விலகி விட்டதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை 'இந்தியன்-2' படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் 'அவர் திரும்ப வந்துவிட்டார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பகிர்ந்துள்ள நடிகர் கமல்ஹாசன் விரைவில் 'இந்தியன்-2' படப்பிடிப்பு தொடங்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று காலை தொடங்கியுள்ளது. இதில், கமல்ஹாசன் இல்லாத சில  காட்சிகள் இன்று படமாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

'இந்தியன் 2' படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, ஐஸ்வர்யா ராஜேஷ், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லைகா புரொடக்‌சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indhiyan 2 shoot begins today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->