இரண்டு கதாநாயகியுடன் டூயட்...! சந்தானம் படத்தின் அதிரவைத்த அடுத்த அப்டேட்.!! - Seithipunal
Seithipunal


நகைச்சுவை நாயகனாக நடித்து வந்த நடிகர்., தற்போது கதாநாயகனனாக நடித்து கொண்டு திரைப்படங்களை வெற்றிவாகை சூடவைக்கும் நடிகர் சந்தானம்.. இவர் கதாநாயனாக நடிக்க துவங்கினாலும்., காமெடியில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர். 

எத்தனை புதுப்புது காமெடி நடிகர்கள் வந்தாலும்., சந்தானம் ஒருவரின் திறமைக்கு யாரும் ஈடாகவில்லை என்று திரைத்துறையில் தொடர்ந்து பேச்சுக்கள் கடந்த வருடங்களாக அடிபட்டு வருகிறது. 

santhanam, santhanam images,

இந்த சமயத்தில்., சந்தானத்தின் அடுத்த படப்பிடிப்பானது துவங்கியது. இந்த திரைப்படத்தை மசாலா பிக்ஸ் மற்றும் எம்.கே.ஆர்.பி.புரடொக்‌ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடித்து வரும் நிலையில்., இந்த படத்தின் பெயர் வைக்கப்பவில்லை. 

இந்த படத்திற்கு படப்பிடிப்பானது சென்னையில் துவங்கியுள்ள நிலையில்., சந்தானத்திற்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி நடித்துள்ளார். தாரா அலிஷா தற்போது A1 திரைப்படத்திற்கு பின்னர் சந்தானத்துடன் நடிக்கவுள்ளார். 

santhanam, santhanam images,

இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக சுவாதி முபலா அறிமுகமாகும் நிலையில்., இவர் கடந்த 2017 ஆம் வருடத்தில் கர்நாடக அழகி பட்டம் வென்றவரும் ஆவார். இவர்களோடு ஆனந்தராஜ்., மொட்டை இராஜேந்திரன்., லொள்ளு சபா மனோகர் மற்றும் பரத் ரெட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர். 

இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆர்.கே.கண்ணன் இயக்கி வரும் நிலையில்., இப்படம் காமெடி மற்றும் காதல்., ஆக்ஷன்., பேண்டஸி கலந்த திரைப்படமாக உருவாகிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை 60 நாட்கள் தொடர்ந்து மேற்கொண்ட பின்னர்., வரும் பிப்ரவரி மாதத்தில் இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in santhanam act with two heroine


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->