விஜயை தான் எச்சரிக்கிறதா.? கேஜிஎஃப்-2.?! இன்று வெளியான பாடலால் சர்ச்சை.!  - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டில் வெளியாக உள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கேஜிஎஃப்-2. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.

மேலும், இந்த படத்தில் யாஷ் அதீரா, சஞ்சய் தத், ரவீனா டண்டன் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய வழிகளில் வெளியாக உள்ளது. கேஜிஎப் 2 படத்தின் ட்ரைலர் வரும் மார்ச் 27ஆம் தேதி மாலை 6:40 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் கேஜிஎப் 2 படத்தின் டீசர் வெளியாகி 240 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இயக்குனர் இந்த படத்தின் லிரிக்கலி வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றது. 

பீஸ்ட் மற்றும் கே.ஜி.எப் 2 ஆகிய இரு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள நிலையில் கே.ஜி.எப் 2 படத்தின் பாடல் இன்று வெளியாகியது. அந்த பாடலுக்கு முன்பான வசனத்தில், "குறுக்க போகாதீங்க சார் நல்லது இல்லை." என்று பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளது. மறைமுகமாக கேஜிஎப் குழு பீஸ்ட் படத்தை தான் எச்சரிக்கிறது என்ற சர்ச்சையை கிளப்பியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

if KGF team warn Beast movie 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->