மொத்தமாக முடங்கியது 'ஹாலிவுட்' சினிமா உலகம்! 63 ஆண்டுகளில் இதுவே முதல்முறை!  - Seithipunal
Seithipunal


சுமார் 63 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஹாலிவுட் திரையுலகம் முடங்கி உள்ளது. 

ஹாலிவுட் திரைத்துறையை சேர்ந்த எழுத்தாளர்கள் கடந்த சில மாதங்களாகவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு, பெருகிவரும் டெக்னாலஜி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 'ரைட்டர் கில்ட் ஆப் அமெரிக்கா' என்ற எழுத்தாளர்கள் அமைப்பு, கடந்த மே மாதம் முதல் போராட்டத்தில் இறங்கியது.

இந்த போராட்டத்திற்கு ஹாலிவுட் திரை உலகை சேர்ந்த பல அமைப்புகளும் ஆதரவளித்துள்ளன. தற்போது இந்த போராட்டத்திற்கு ஹாலிவுட் திரைப்பட நடிகர்கள் கூட்டமைப்பும் ஆதரவு அளித்துள்ளது.

இதற்கிடையே, புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் ‘ஒப்பன்ஹெய்மெர்’ படத்தின் ஸ்பெஷல் ப்ரீமியர் வெளியீட்டு விழா லண்டனில் நேற்று நடைபெற்றது. 

இந்த விழாவை அந்த படத்தின் நடிகர்களான சிலியன் மர்ஃபி, ராபர்ட் டவுனி ஜூனியர் உள்ளிட்டோர் புறக்கணித்து,  போராட்டத்துக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இதில் ஆச்சர்யப்படும் விஷயம், இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இதனை அறிவித்தது தான் போராட்டம் உச்சம் அடைந்துள்ளதை உலகம் அறிந்து உள்ளது.

மேலும், முன்னணி ஹாலிவுட் பிரபலங்களான மெரில் ஸ்ட்ரீப், ஜெனிஃபர் லாரன்ஸ், மேட் டேமன், ஃப்ளோரன்ஸ் பக், ரம மலெக் உள்ளிட்டவர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

உட்சமடைந்துள்ள இந்த போராட்டம் காரணமாக கடந்த 63 ஆண்டுகளில் ஹாலிவுட் துறை முதன்முறையாக முடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hollywood Stuned in protest


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->