ஆபாச படங்களை காண்பித்து தொல்லை... பிரபல நடன இயக்குனர் மீது பெண் புகார்..!! - Seithipunal
Seithipunal


33 வயது பெண் ஒருவர், தன்னை ஆபாச படங்கள் பார்க்க கூறி தொடர்ந்து வற்புறுத்தி வருவதாகவும், மேலும் தனது சம்பளத்தில் இருந்து கமிஷன் கேட்டதாகவும் பிரபல பாலிவுட் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சாரியா மீது மராட்டிய பெண்கள் ஆணையம் மற்றும் அம்போலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். 

 நடன இயக்குனரான ஆச்சாரியா ஆபாச படங்களின் வீடியோவை காண்பித்து தன்னை பார்க்குமாறு வற்புறுத்துகிறார். வேண்டாம் என்று சொல்லியும் அவர் மீண்டும் மீட்டும் தன்னை வற்புறுத்துவதாகவும், தனது வருமானத்தில் இறுத்து தனக்கு கமிஷன் கொடுக்கவேண்டும் என்றும் தொடர்ந்து அவர் தன்னை தொல்லை செய்வதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார். 

இதை தொடர்ந்து, இந்த நடன இயக்குனர் மீது முன்னதாகவே பல்வேறு புகார்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கணேஷ் ஆச்சார்யா, தன்னைப் பற்றி  வதந்திகளை பரப்பியதாகவும் நற்பெயரைக் கெடுத்ததாகவும் நடிகை தனுஸ்ரீ தத்தா இதற்கு முன் கடுமையாக குற்றம்சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl complaint on dance master


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->