அடுத்த அதிர்ச்சி.. பிரபல வில்லன் நடிகர் மருத்துவமனையில் அனுமதி.! என்னாச்சு? - Seithipunal
Seithipunal


தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி மராட்டிய என பல மொழி படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த சாயாஜி ஷிண்டே உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தற்போது 65 வயதாகும் சாயாஜி ஷிண்டேவுக்கு சில நாட்களுக்கு முன்பு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதை அடைத்து அவர் மகராஷ்டிரா மாநிலம் சாரதா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது இதயத்தின் வலது புறத்தில் 90% அடைப்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். அதே மருத்துவமனையில் அதுவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது உடல்நிலை தேறி சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ள சாயாஜி ஷிண்டே பல படங்களில் குணச்சித்திர வேடத்தையும் ஏற்று நடித்துள்ளார். அனுஷ்காவின் அருந்ததி, விஜயின் வேட்டைக்காரன், தனுஷின் படிக்காதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous actor sayaji Shinde admitted in hospital


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->