சிம்புவுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள கொரோனா குமார் திரைப்படத்தில் பகத் பாசில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சிம்பு மாநாடு திரைப்படத்திற்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, இயக்குனர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த 2 படங்களையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். தற்போது இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கொரோனா குமார் திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு வில்லனாக, பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் விக்ரம், மாமன்னன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fahad fazil negative role in Simbu corona Kumar movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->