கோலமாவு கோகிலா படத்தை நினைவுக்கு கொண்டுவரும் ஹாலிவுட் படம்.!  - Seithipunal
Seithipunal


கோலமாவு கோகிலா படத்தை நினைவுக்கு கொண்டுவரும் ஹாலிவுட் படம்.! 

கடந்த 2018-ஆம் ஆண்டு இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான படம் கோலமாவு கோகிலா. க்ரைமில் காமெடியை இணைத்து மிகவும் சிறப்பாக இந்தப் படம் எடுக்கப்பட்டதால் ரசிகர்களும் அதனை கொண்டாடி வந்தனர். இதனால் அப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில் கோலமாவு கோகிலா படத்தைப் போலவே "End of the Road" என்ற ஹாலிவுட் படம் கடந்த ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் கதை நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருக்கும் கறுப்பின குடும்பத்தைப் பற்றியது. அதாவது, அமெரிக்கா நாட்டில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து ஹூஸ்டனுக்கு செல்ல அந்தக் குடும்பம் முடிவு செய்து காரில் பயணம் மேற்கொண்டது.

அந்த நேரத்தில் சட்டவிரோதமாக ரவுடி கும்பலிடம் மிகப் பெரிய ரொக்கம் ஒன்று கைமாறுகிறது. அந்த பணத்தை அந்த கும்பலில் உள்ள ஒருவனே அபகரித்து செல்ல முயற்சி செய்கிறான். ஆனால், அந்தப் பணத்தை காரில் பயணிக்கும் கறுப்பின குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் எடுக்க பிரச்னை ஆரம்பமாகிறது.

இந்த சிக்கலில் இருந்து அந்த கறுப்பின குடும்பம் எப்படி தப்பித்தது என்பதே இந்தப் படத்தின் கதை. க்ரைம், டிராமா வகை கதையாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்தக் கதையின் கரு கோலமாவு கோகிலா படத்துடன் சற்று பொருந்தி உள்ளது. 

இயக்குநர் Millicent Shelton இயக்கிய இந்தப் படத்தில் குடும்பத் தலைவி கதாபாத்திரத்தில் பிரபல ராப் பாடகி குயின் லடிஃபா நடித்துள்ளார். கோலமாவு கோகிலாவில் நயன்தாரா கதாபாத்திரம் பிரச்னையை சமாளிப்பது போல், இந்தப் படத்தில் குயின் லடிஃபா சமாளிக்கிறார். இந்த படத்தை பார்க்கும் போது கோலமாவு கோகிலா படம் நிச்சயம் நினைவிற்கு வரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

"end of the road" hollywood movie like kolamavu kokila


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->