ரஜினி படத்தில் இணைந்த இளையராஜா.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும். விமர்சன ரீதியாக அண்ணத்த திரைப்படம் வெற்றி பெறவில்லை என்றே கூறலாம்.

அதனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்படியாவது ஒரு வெற்றி படத்தை கொடுத்தாக வேண்டும் என்று மும்முரம் காட்டி வருகிறாராம். அதற்காக தற்போது பல இயக்குனர்களிடம் கதைக்கேட்டு வருகிறாராம்.

அந்த வகையில் தற்போது பாலிவுட் இயக்குனரான பால்கி சொன்ன கதை ரஜினிக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பால்கி இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ரஜினி பால்கி கூட்டணி உறுதியானால் 28 ஆண்டுகளுக்கு பிறகு இசைஞானி இளையராஜா ரஜினி படத்திற்கு இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Elayaraja compose in Rajini movie


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->