நடிகர் நானி நடித்த படங்களில் 'தசரா' தான் பெஸ்ட்! புகழ்ந்து தள்ளிய ராஜமெளலி! - Seithipunal
Seithipunal


பிரபல இயக்குனர் ராஜமெளலி, நடிகர் நானியை புகழந்து டிவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு செய்து உள்ளார்.

நடிகர் நானி நடிப்பில் வெளியான 'தசரா' படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

மேலும், படத்தின் கதாநாயகி நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். பயங்கர ஆக்சன் படமாக வெளிவந்த தசரா படம் இரண்டே நாட்களில் 50 கோடியை வசூலித்து சாதனை செய்துள்ளது.

தரமான சண்டை காட்சிகளுக்கு சற்றே குறையாத காதல் காட்சிகள் என்று படம் அதகாலமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

அறிமுக இயக்குனரின் படமா இது' என பார்ப்போரை வியக்க வைக்கும் வகையில், ஸ்ரீகாந்த் ஒடேலா படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் நானி நடித்த படங்களில் தசரா தான் பெஸ்ட் என, இந்தியாவின் தரமான இயக்குனர்களில் ஒருவரான ராஜமெளலி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dussehra is the best among actor Nanis films Rajamelali praised


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->