'தனுஷை நினைத்து பெருமை படுகிறேன்.'- பாமக தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் ட்வீட்.! - Seithipunal
Seithipunal


தி கிரே மேன் திரைப்படம் அந்தோணி ரூசோ மற்றும் ஜோ ரூசோ இயக்கத்தில் உருவாக்கப்பட்ட திரில்லர் திரைப்படம். இது 2009இல் வெளியான மார்க் கிரேனியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படத்திற்கு ஹென்றி ஜாக்மேன் இசையமைத்துள்ளார். 

இதில் பிரபல தமிழ் சினிமா நடிகர் தனுஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். எனவே, இந்த படம் தமிழர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் நெட்பிலிக்ஸ் ஒடிடி தளத்திலும் வெளியாகியது. 

இத்தகைய நிலையில், இந்த திரைப்படத்தை பார்த்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடிகர் தனுஷின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "தனுஷின் தி கிரே மேன் திரைப்படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன். இதில், நடிகர் தனுஷின் நடிப்பை பார்த்து பெருமைப்படுகிறேன். அவரது திறமைக்கு எனது வாழ்த்துக்கள். வரும் காலங்களில் தனுஷ் தமிழ் மற்றும் இந்திய சினிமாவுக்காக நிறைய சாதனைகளை படைக்க வேண்டுமென்று விரும்புகிறேன்." என கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr anbumani Ramadoss Tweet about the Grey man Movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->