இந்திய அரசு சார்பில் இமானுக்கு கௌரவ டாக்டர் பட்டம்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் 'தமிழன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக தடம் பதித்தவர் டி.இமான். இதைத் தொடர்ந்து, ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு அஜித் நடிப்பில் வெளிவந்த 'விஸ்வாசம்' படத்தில் இசையமைத்ததற்காக தேசிய விருது பெற்றார். 

மேலும், தன் படங்களின் மூலம் பல திறமையான இசைக்கலைஞர்களையும் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இதையடுத்து, சசிகுமார் நடிப்பில் உருவாகும் 'காரி', விஜய் ஆண்டனி மற்றும் சுசீந்திரன் கூட்டணியில் உருவாகும் 'வள்ளி மயில்' உள்ளிட்ட சில படங்களிலும் இசையமைத்து வருகிறார். 

இதற்கிடையே சமூக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் சார்பில் இசையமைப்பாளர் இமானுக்கு "கௌரவ டாக்டர் பட்டம்" வழங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. 

இந்நிலையில் இசையமைப்பாளர் இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, "இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நிறுவனத்திடமிருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி" என்றுக் குறிப்பிட்டு அதற்கான சான்றிதழ்களையும் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து, இமானுக்கு ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doctor award goes to music directer d iman


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->