பிரபல நடிகருடன் இணையும் அட்லீ.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்தப் படம் வெற்றி படமாக அமைந்ததையடுத்து நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என்று அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கினார்.

இதைத் தொடர்ந்து, இயக்குனர் அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கிய 'ஜவான்' திரைப்படம் பாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி பாக்ஸ் ஆபீஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. அனிருத் இசையமைபில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. 

இந்த நிலையில், இயக்குனர் அட்லீயின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, அட்லீ இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும், இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது சுகுமார் இயக்கத்தில் 'புஷ்பா 2' திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director atlee joined actor allu arjun


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->