'தனுஷ் 51' படத்தின் நியூ அப்டேட்!  - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான படம் 'வாத்தி'. இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. 

இந்நிலையில் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தில் தனுஷ் நடித்துள்ளார். 

இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் தன் 50 ஆவது படத்தை இயக்கி வருகிறார். 

இந்த படத்தில் துஷாரா விஜயன் ஜோடியாகவும் சகோதரர்களாக எஸ்.ஜே. சூர்யா, சந்திப் கிஷன் ஆகியோர் நடிக்கின்றனர். 

'ராயர்' என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் தனுஷ் கேங்ஸ்டராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தனுஷ் தன் 51வது படத்தில் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் கதாநாயகி ரஷ்மிகா மந்தனா. 

நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பை பட குழு தெரிவித்துள்ளது. இந்த படம் 1980ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டும் அரசியலை பின்னணியாக வைத்தும் உருவாக இருக்கும் என புதிய தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush 51 movie New update


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->