வாரிசு படத்தில் தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.! மனம் திறந்த இசையமைப்பாளர் தமன்.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகியது. இந்தப் படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. கதை மிகவும் பழைய கான்சப்ட் என்று பலரும் கழுவி ஊற்றினர். 

இதனை தொடர்ந்து, அடுத்ததாக நடிகர் விஜய் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். நேரடியாக தெலுங்கில் உருவாகும் இந்த படம் தென்னிந்திய மொழிகளில் உருவாக்கம் செய்யப்படுகிறது.

 இதனை தில் ராஜு தயாரிக்க தமன் இசை அமைக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடிக்க இருக்கிறார். இதில், நடிகர்கள் சரத்குமார், சஷியாம், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தில் பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது இந்த திரைப்படம் குறித்து இசையமைப்பாளர் தமன், "வாரிசு திரைப் படத்தில் 6 பாடல்கள் இருக்கின்றன. தியேட்டர்களில் ரசிகர்கள் நிச்சயம் ஆட்டம் போடுவார்கள். ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு விதமான உணர்வுகளை உள்ளடக்கியது. விஜயின் ரசிகர்களை நினைவில் கொண்டு தான் அனைத்து பாடல்களையும் உருவாக்கியிருக்கிறோம்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhaman about varisu music


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->