பிக்பாஸ் நடிகை.. திடீர் கைது.. சிசிடிவியில் அம்பலமான அராஜகம்.!  - Seithipunal
Seithipunal


தாடி பாலாஜியின் மனைவியான நித்யா பாலாஜி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் தாடி பாலாஜியும் அவருடைய மனைவி நித்யா பாலாஜியும் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்கள். இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து கூட சண்டை போட்டுக் கொண்டனர். அடிக்கடி சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் தாக்கி பதிலடி கொடுத்துக் கொள்வார்கள். 

இந்த நிலையில், சென்னை மாதவரம் வீட்டில் வசித்து வரும் நித்யா தன்னுடைய எதிர் வீட்டினருடன் சண்டை ஏற்பட்டு முன்பகையுடன் இருந்து வந்துள்ளது. ஆகவே, அவர்களது கார் கண்ணாடியை கல்லை எடுத்து அடித்து, உடைத்து நித்யா பாலாஜி சேதப்படுத்தி இருக்கிறார்.

இதை சிசிடிவி வீடியோக்களில் பார்த்த அந்த குடும்பத்தினர் போலீசில் நித்யா மீது புகார் கொடுத்தனர். போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் நித்யாவை கைது செய்துள்ளனர். அதன் பின் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhaadi Balaji Wife arrested


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->