வெங்கட் பிரபு-நாக சைதன்யாவின் கஸ்டடி படத்தின் ட்ரெய்லர் எப்போது ரிலீஸ்.. படுக்குழு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் வெங்கட்பிரபு. இவரது இயக்கத்தில் கடைசியாக சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகியது. நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்த திரைப்படம் மற்றும் சிம்புவின் காம்பேக் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த படமும் நல்ல வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் அசோக்செல்வனை வைத்து மன்மதலீலை என்ற திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு  தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதன் மூலம் முதல் முறையாக வெங்கட்பிரபு தெலுங்கு படத்தை இயக்குகிறார்.இந்த திரைப் படத்தில் ஹீரோவாக நாக சைதன்யா நடிக்கிறார். 

இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். இதனை ஸ்ரீநிவாஸா சில்வர் ஸ்க்ரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், அரவிந்த் சாமி, பிரேம்ஜி, பிரியாமணி, சம்பத் ராஜ் மற்றும் பிரேமி விஷ்வநாத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது கஸ்டடி படத்தின் ட்ரெய்லர் வரும் மே 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Custody movie trailer release on may 5


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->