உலகமெங்கும் நவம்பர் 4-ந்தேதி முதல்.. 'காபி வித் காதல்'...! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சுந்தர் சி இயக்கியுள்ள படம், 'காபி வித் காதல்'. இந்தப் படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஏ.சி.எஸ்.அருண்குமாரின் பென்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. 

இப்படத்தில் நடிகர் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா உள்பட பல முன்னணி நடிகர்- நடிகைகள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் அடுத்த மாதம் 4-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

இந்தப்படம் குறித்து இயக்குனர் சுந்தர் சி தெரிவித்ததாவது, "ஒரு அழகான 'பீல் குட்' படம் எடுக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அந்த ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறி இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க மக்கள் புன்னகையுடன் ரசிக்கக் கூடிய வகையில் இருக்கும். ஒரு அழகான குடும்பத்தில் நடக்கும் சண்டை, காதல், மோதல், நகைச்சுவை என்று ஒரு அழகான தொகுப்பாக இந்த படம் தயாராகி உள்ளது. 

இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை இன்னும் மெருகேற்றி இருக்கிறது. இதைத் தொடர்ந்து, நடிகர்-நடிகைகளின் நேர்த்தியான நடிப்பாலும், திரைக்கலைஞர்களின் உண்மையான உழைப்பாலும் இந்த படம் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. 

மேலும், இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றும். தமிழகம் முழுவதும் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளது, என்று இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coffee with kathal movie release date


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->