பிரபல இயக்குனர் வீட்டில் அசத்தலான விருந்து.! இன்ஸ்ட்டா பதிவு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக அறிமுகமாகி ரக்கெட் பாயாக மாறியவர் மாதவன். நடிகராக இருந்த இவர் ராக்கெட்ரி திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமாக இருக்கிறார்.

மணிரத்தினத்தின் அலைபாயுதே படத்தில் அறிமுகமான இவர். லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ரன் திரைப்படத்தில் முதன்முதலாக ஆக்சன் காட்சிகளில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வந்த மாதவன் 2016 ஆம் ஆண்டு சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில் பாக்ஸிங் பயிற்சியாளராக நடித்திருந்தார்.


தமிழ் சினிமா இதுவரை பார்க்காத ஒரு வித்தியாசமான கெட்டப்பில் மாதவன் தோன்றிய அசத்தியிருந்தார். இதனால் அந்த திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த திரைப்படத்தில் இவருடன் ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவில் மாதவனுக்கு ஒரு கம்பேக் கொடுத்தது என்றே கூறலாம்.

தற்போது நயன்தாராவுடன் டெஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மாதவன். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அறிவியல் அறிஞர் ஜி டி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் நடிகர் மாதவனுக்கு இயக்குனர் சுதா கொங்காரா தனது வீட்டிற்கு அழைத்து  விருந்து வழங்கியிருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த விருந்தில் வங்காய் அன்னம், வடியாலு பொடி, வத்த குழம்பு, சாம்பார்  மற்றும் தயிர் சாதம் ஆகிய ஆறு சுவை உணவுகளை வழங்கி இருக்கிறார் இயக்குனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chocolate Boy Madhavan was given delicious food by the director of iruthi sutru


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->