சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு! - Seithipunal
Seithipunal


வைகை புயல் வடிவேலு நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் சிம்பு தேவன். இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் வைத்து புலி என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாகவும் அதில் படத்தில் வடிவேலு நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தயாரிப்பில் உருவாகயிருந்த 23ஆம் புலிகேசி இரண்டாம் பாகம் திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் இயக்குனர் சிம்புதேவனின் அடுத்த படத்தில் யோகி பாபு நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு இயக்குனர்கள் வெங்கட் பிரபு மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் வெளியிட்டனர். இயக்குனர் சிம்புதேவனின் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிக்கும் படத்திற்கு "BOAT - நெய்தல் கதை" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chimbudevan new film titled Boat starring Yogibabu in lead


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->