திரிஷா, நயன்தாரா, பிரியாவாரியரை கதறவிட்ட கல்லூரி மாணவர்கள்! கொந்தளிக்கும் திரை உலகம்! - Seithipunal
Seithipunal


சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனை ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதனைத்தொடர்ந்து, தமிழ் சினிமாவில் நடித்து வரும் முன்னணி நடிகைகளை கலாய்க்கும் விதமாக சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் முதலில் நடிகை திரிஷாவின் வயது குறித்து விமர்சனம் முன்வைக்கப்பட்டது, அதை தொடர்ந்து நடிகை நயன்தாராவின் காதல் குறித்து இரட்டை அர்த்த வசனத்தில் விமர்சனம் செய்யப்பட்டது இதை ரசித்த மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர். மூன்றாவதாக நடிகை பிரியாவாரியரை மோசமான இரட்டைஅர்த்தத்தில் விமர்சித்தனர்.

மருத்துவ மாணவர்களின் நடிகைகள் குறித்த இந்த இரட்டை அர்த்த வசனம் மற்றும் விமர்சனத்தை எல்லாம் கேட்டு, அந்த விழாவுக்கு வந்த முக்கிய பிரமுகர்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர். 

நடிகை திரிஷா, நயன்தாரா, பிரியாவாரியர் உள்ளிட்ட நடிகைகளை மாணவர்கள் வைத்த விமர்சனத்தை அறிந்த தமிழ் திரை உலகினரும் தங்களது அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai medical college function


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->