சந்திரமுகி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.. வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


ராகவா லாரன்ஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழில் கடந்த 25 ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோதிகா நயன்தாரா பிரபு வடிவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிய 650 கோடிக்கு மேல் செய்தது.

அதனைத் தொடர்ந்து சந்திரமுகி 2 படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் வாசு முடிவு செய்தார். அதன்படி லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் சந்திரமுகி 2 படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார்.

மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகியாக நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து இதில் வடிவேலு, சரத்குமார், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இப்படத்தின் சூட்டிங் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்ட நிலையில், வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட பட குழு முடிவெடுத்துள்ளது. ஆகவே, படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை பட குழு வெளியிட துவங்கியுள்ளது. அந்த வகையில் தற்போது சந்திரமுகி 2 படத்தின் வேட்டையன் கெட்டப்பில் இருக்கும் லாரன்ஸின் போஸ்டர் ஒன்றை பட குழு வெளியிட்டு இருக்கிறது. இந்த போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandramukhi 2 movie lawrance vettayan get up update


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->