ரிலீசுக்கு தயாராகும் ''கேப்டன் மில்லர்'': தடை விதித்த நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா, சுமேஷ், சிவராஜ் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

தணிக்கை குழு யு /ஏ சான்றிதழ் வழங்கி உள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடக்கூடாது என தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தை சட்டவிரோதமாக வெளியிடுவதால் தயாரிப்பாளர், திரை அரங்கத்தினர் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுவார்கள். 

இதனால் தகுந்த தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்ற நீதிபதி, 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தை 1166 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

captain miller movie update


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->