இந்து மத உணர்வை புண்படுத்திய கன்னட நடிகர்.! விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்.!  - Seithipunal
Seithipunal


கன்னட நடிகாரன ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் பழமையான கதையை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வெளியான  இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியிடுவதற்கு  படக்குழு பணிகளை மேற்கொண்டது. 

இதையடுத்து, கடந்த அக்டோபர் 15-ந்தேதி காந்தாரா திரைப்படம் தமிழில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில், இந்த படத்தின் இயக்குனரான ரிஷப் ஷெட்டி பேட்டி ஒன்றில் தெரிவித்ததாவது, படத்தில் இடம் பெற்ற பூட்டா கோலா இந்து கலாசாரத்தின் ஒரு பகுதி என்று தெரிவித்தார்.

ஆனால், இதுகுறித்து, கன்னட நடிகர் சேத்தன் அகிம்சா தெரிவித்ததாவது, பூட்டா கோலா இந்து கலாசாரம் கிடையாது என்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனை கண்டித்து பஜ்ரங்தள அமைப்பினர் மத உணர்வுகளை புண்படுத்தி விட்டார் என்று தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த அமைப்பை சேர்ந்த ஷிவ குமார் என்பவர் சேத்தனுக்கு எதிராக ஷேஷாத்ரிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இதைத் தொடர்ந்து, மக்களை தவறாக வழிநடத்துதல் என்ற பிரிவின் கீழ் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, "விசாரணை அதிகாரிக்கு முன் ஆஜராக சேத்தனுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அதன்பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். ஒரு சில நாட்களுக்கு முன்பு, உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராகவும் புண்படுத்தும் வகையில் டுவிட்டரில் சேத்தன் பதிவிட்டு உள்ளார் என்று  தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

canada actor sethan twitter post police FIR


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->