பிகில் பட 'மாரி'-க்கு திருமணமா.? நடிகையின் திருமண புகைப்படம் வைரல்.! வாழ்த்தும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


டிகர் விஜய் நடிப்பில் கடந்த 2019 ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆக்ஷன் படமாக வெளியானது தான் பிகில். இதில் ஹீரோயினாக நயன்தாரா நடித்திருப்பார். அட்லி இயக்கிய இந்த படத்தில் வர்ஷா பொல்லம்மா, அமிர்தா ஐயர், ஜாக்கி செராப், காயத்ரி ரெட்டி உள்ளிட்ட பல ஹீரோயின்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்த நிலையில் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்தது. இதில் கால்பந்து வீராங்கனையாக மாரி என்ற கதாபாத்திரத்தில் காயத்ரி ரெட்டி நடித்திருப்பார். 

இவர் தனது 20 வயதில் மிஸ் இந்தியா பட்டத்தை பெற்றவர். ஜீ தமிழ் சர்வைவல் சீசன் 1 நிகழ்ச்சிகள் கலந்து கொண்டார். மேலும், லிப்ட் படத்திலும் தாரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் ஒரு கிராபிக்ஸ் டிசைனர் ஆகவும் பணியாற்றி வருகின்றார். 

இத்தகைய நிலையில், தற்போது, அவருக்கு 26 வயதாகும் நிலையில் கடந்த மே மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் தற்போது குடும்பத்தினர் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. 

திருமணத்திற்கு பின்னர் இவர் வெளிநாட்டில் செட்டிலாக இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார். தனது திருமண புகைப்படங்களை காயத்ரி ரெட்டி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அவருக்கு சக நடிகர்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigil movie gayathri reddy marriage


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->