இவங்களுக்கு இப்படித்தான்.... வனிதாவின் சர்ச்சை ஷேர் வீடியோ..!! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகப்பெரிய கேலி கிண்டல்களை சந்தித்தவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது ஒரு வீடியோவை ஷேர் செய்து பெண்களை கிண்டல் செய்பவர்களுக்கு இது ஒரு சரியான செருப்படி என்று கூறி பதிவிட்டு பாராட்டியுள்ளது வைரலாகி வருகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் வனிதா விஜயகுமார் தனது அதிகாரத்தை மற்றும் ஓவர் அலட்டல் போன்ற குணத்தால் இந்த நிகழ்ச்சியில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களையும் எதிர்த்து நின்று நியாயத்திற்காக போராடுகிறேன் என்ற பெயரில் பல பஞ்சாயத்துகளில் கிளப்பி விட்டுக்கொண்டு இருந்தார். இவரினால் ஏற்பட்ட பஞ்சாயத்துகள் அனைத்தையும் நாம் அறிவோம். 

வனிதா என்ற பெயருடன் வத்திக்குச்சி வனிதா., வாத்து வனிதா என்று பல பட்டப் பெயர்கள் சூட்டி அதனை அறிந்து கொள்ளும் விதத்திலும் செயல்பட்டு வந்தார். மேலும்., தனது சாதனைகளை பட்டியலிட்டு கூறி மிகப்பெரிய அலப்பரை செய்து., சில சமயம் பெரிய பல்பும் வாங்கினார். இவர் பிக் பாஸ் இல்லத்தில் இருந்த நாட்கள் கடந்த 3 சீசன்களில் இல்லாத அளவு பல சர்ச்சைகள் இருந்தது.  

vanitha vijayakumar,

இதனைத்தொடர்ந்து பிக் பாஸ் எலிமினேஷன் மூலமாக வெளியேறிய இவர் மீண்டும் விக்பாஸ் இல்லத்திற்கு வந்து பெரும் பஞ்சாயத்தை கிளப்பிவிட்டார். பிக்பாஸ் இல்லத்திலிருந்து பெண்களுக்கு நான்தான் பாதுகாவலன் என்ற பெயரில் மதுமிதாவை உசுப்பேத்தி விட்டு., பிரச்சனை ஏற்பட்டவுடன் நன்றாக குளிர் காய்ந்து கொண்டிருந்தார். 

இந்த நிலையில்., தற்போது இவர் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த டுவிட்டர் பதிவில்., "ஒரு நபரை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்களது நேரத்தை வீணடிக்காமல் கடந்து செல்லுங்கள்... பயனற்ற நபர்களுக்கு நீங்கள் ஏன் பதிலளிக்க வேண்டும்".. என்று கூறி வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளார். இந்த பதிவானது தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigg boss vanitha twitter video


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->