முதல் நாளே முட்டிக்கிச்சு.. பிக்பாஸ் வீட்டில் ரகளைகள் ஆரம்பம்.!! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதில் பாத்திமா பாபு, சாக்‌ஷிஅகர்வால், மதுமிதா, கவின், சரவணன், வனிதா விஜயகுமார், சேரன், அபிராமி, மோகன் வைத்யா, சாண்டி, முகென் ராவ், தர்ஷன், ரேஷ்மா ஆகிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று உள்ளனர். 

இவர்கள் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கி, அங்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகளை  வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்பது போட்டி நீதிமுறை. இறுதியில் மக்கள் தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களை வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.நேற்று 15 போட்டியாளர்கள் அறிமுகம் செய்து வைத்து, பிக் பாஸ் வீட்டிற்குள் கமலஹாசன் அனுப்பி வைத்தார். 

இந்நிலையில் என்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியில் புரோமோ வீடியோ விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் தண்ணீருக்கும், எரிவாயுவுக்கும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு போட்டியாளர்கள் அனைவரும் கைத்தட்டி வரவேற்றனர். அப்போது பேசிய பாத்திமா பாபு பிக்பாஸ் வீட்டில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற நிலை வந்து இருப்பது ஒரு அவலம். இதற்கு கைதட்ட வேண்டியதில்லை என்றார். 

இதற்கு பதிலளித்த சேரன் தண்ணீர் பயன்பாட்டிற்காக ஒரு அளவீடு கொடுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் சிக்கனத்தை கொண்டு வருவதற்காகத்தான் கைதட்டி வரவேற்றனர். நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலேயே தண்ணீரால் வீட்டுக்குள் பிரச்சனை எழுந்துள்ளது.

English Summary

bigg boss season 3 day 1


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal