கடுமையான டாஸ்க்கால் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற போகும் நபர்.! வெளிவந்த தகவல்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நாளில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சி 85 நாட்களுக்கு மேல் கடந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது. இரண்டு சீசன்களை போலவே மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் வெளியேறி தற்போது 7 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இதை தொடர்ந்து சேரன், ஷெரின், கவின், லாஸ்லியா, சாண்டி ஆகியோர் இந்தவாரம் எவிக்சன் லிஸ்டில் இருக்கிறார்கள்.
 
அடுத்த கட்டமாக, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் டாஸ்க்குகளில் எந்த போட்டியாளர் வெற்றி பெறுகிறரோ அவர் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்வார் என்றும் பிக் பாஸ்ஸில் தெரிவித்திருந்தார்கள். இந்த டாஸ்க்குகளில் தர்ஷன் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்படத்தக்கது. 

இந்த நிலையில் சாண்டி, தர்ஷன், முகேன் மற்றும் கவின் ஆகியோர் இளைஞர்கள் என்பதால் பிக் பாஸ் கொடுக்கும் கஷ்டமான டாஸ்குகளை சமாளித்து விளையாடி வருகின்றனர். இவர்களோடு ஒப்பிடும் போது சேரன் வயதில் மூத்தவராக இருப்பதால் கஷ்டமான டாஸ்குகளை சமாளிக்க முடியாமல் விளையாடி வருகிறார். 

இதனால் டாஸ்க்குகளை சமாளிக்க முடியாமல் சேரன் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் நேற்றைய போட்டியின் போது லாஸ்லியா மாற்று ஷெரினுக்கு காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த வாரம் வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால் தற்போது ஷெரின் மிகவும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். இதனால் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigg boss eliminated cheran in this week


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->