பிக்பாஸ் நாமினேஷன் ஆனவர்களில் இந்த வார வெளியேற போவது யார்? முதல் நாள் பிக்பாஸ் ஓட்டு எண்ணிக்கை முடிவுகள்!!  - Seithipunal
Seithipunal


பிக்பாஸில் போட்டியிலிருந்து கடந்த வாரம் அபிராமி வெளியேறியதை தொடர்ந்து இந்த வாரத்திற்க்கான எலிமினேட் நாமினேஷன் நடைபெற்றது. அந்த வகையில்  சேரன், தர்ஷன், சாண்டி, மற்றும் சில வாரத்திற்கு முன் வந்த கஸ்தூரி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டார்கள்.

இதில் சாண்டி மற்றும் தர்ஷன் நாமினேட் செய்யப்படுவது இதுவே முதல்முறை. இவர்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் இவர்கள் வெளியேறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான் என முன்பே கணிக்கப்பட்டது. அதனால் சேரன், கஸ்தூரிக்கு இருவருக்கும் இடையே தான் போட்டி இருக்கும் என்று நினைத்தால் சேரன் விஷயத்தில் லொஸ்லியாவின் செயலால் அவர்மீது மக்களுக்கு உள்ள வெறுப்பு மொத்தமும் சேரனுக்கு ஓட்டாக மாறி சாண்டி, தர்ஷனுக்கு இணையான ஓட்டு எண்ணிக்கையை பெற்றுவிட்டார்.

மேலும், நடிகை கஸ்தூரியை யாரும் கண்டுக்கொள்ளாததால் அவர் இவர்கள் மூவரை விடவும் மிகவும் பின்தங்கியுள்ளார். இதே நிலை இந்த வாரம் முழுவதும் தொடர்ந்தால் வந்த சில வாரங்களிலேயே கஸ்தூரி பிக் பாஸ் போட்டியிருந்து வெளியேற்றப்பட அதிக வாய்ப்புள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigboss this week eliminate


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->