"குஷ்பூவால செத்துடுவேன்." கடுமையாக பேசிய பிரபல இயக்குனர்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் டாப் 5 இயக்குனர்களில் ஒருவர் பாரதிராஜா. இவரது இயக்கத்தில் வெளியான திரை திரைப்படங்களுமே சூப்பர் ஹிட் திரைப்படங்களாக அமைந்துள்ளன. வெவ்வேறு விதமான கதைக்களங்களிலும்  சிறப்பான படைப்புகளை கொடுக்கக்கூடிய  அற்புதமான ஒரு இயக்குனர்.

இவரது படத்தில் நடிப்பதற்கு ஏதேனும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா? என ஏங்காத நடிகர் நடிகைகளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தரமான படைப்புகளை வழங்கி இருக்கிறார்.

1993 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கேப்டன் மகள் இந்த திரைப்படத்தில் குஷ்பூ கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் ராஜா, குஷ்பூ, நெப்போலியன் மற்றும் ஜி எம் குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதிலும் குறிப்பாக எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று பாடல் மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் பெற்றிருந்தது .

பொதுவாகவே இயக்குனர் பாரதிராஜா  கண்டிப்பான இயக்குனர் என்றாலும் கலகலப்பாகவும் இருக்கக்கூடிய ஒருவர்  அவருக்கு பாம்பு என்றால் பயம்,  ஒரு நாள் அந்த திரைப்படத்தின் ஷூட்டிங்கில் பல்லில்லாத பாம்பு ஒன்றை  வைத்துக்கொண்டு குஷ்பூ பாரதிராஜாவை பயமுறுத்திருக்கிறார்.

 

இதனால் மிகவும் பயந்து போன பாரதிராஜா  நான் செத்துப் போனால் அதற்கு இந்த பொண்ணு தான் காரணம் என கடுமையாக குஷ்புவை திட்டியுள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த செய்தி வெளியாகியிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bharathiraja secret released after 30 years of Kushboo tantrum after scaring the director during the shoot


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->