விமானிகளுடன் போதையில்.. வாக்குவாதம் செய்த பீஸ்ட் பட நடிகர்.!  - Seithipunal
Seithipunal


நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் படத்தில் தீவிரவாதியாக நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் who, mask, ஈஸ்க், அன்னையும் ரசூலும் உள்ளிட்ட நிறைய மலையாள படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். 

பீஸ்ட் படம் தோல்வி அடைந்த பின் ஒரு பேட்டியில் பேசிய அவர், தன்னை அப்படத்தில் டம்மியாக காட்டிவிட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும், "பீஸ்ட் பட காட்சிகளில் லாஜிக்கே இல்லை. ஒருவர் எடையை அதிகமாக தூக்கினால் முகத்தில் கஷ்டம் தெரியும். ஆனால் விஜய் முகத்தில் அப்படிப்பட்ட பாவனைகள் இல்லை. இந்த காட்சிகளே தேவையில்லாதது தான்." என்று தெரிவித்து இருந்தார். 

இதனால், விஜய் ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் ஒரு மலையாள படத்தின் பிரமோஷனுக்காக கடந்த பத்தாம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் சாக்கோ துபாய்க்கு சென்றார். அங்கே விமானிகள் அறையில் நுழைய அவர் முயற்சித்துள்ளார். 

அதன் பின் விமான ஊழியர்கள் குடி வரவு அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை எச்சரித்து கேரளாவிற்கே அனுப்பிவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Beast Shine Tom Sakko fight In flight


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->