வசூல் வேட்டை நடத்தும் அயலான் - நான்கு நாட்களில் இவ்வளவா? - Seithipunal
Seithipunal


"ஆர். ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான இந்தப் படத்தில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. அயலான் திரைப்படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் குழந்தைகளையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், 'அயலான்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 
அதாவது, 'அயலான்' திரைப்படம் இதுவரை உலக அளவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. இந்தத் தகவலை படக்குழு போஸ்டர் பகிர்ந்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ayalan movie fifty lakhs collection


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->