மீண்டும் 3 ஹீரோயின்களுடன்.. படம் நடிக்கவுள்ள அசோக் செல்வன்.! இயக்குனர் இவரா.?! - Seithipunal
Seithipunal


கமலஹாசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சி எஸ் கார்த்திகேயன். இவரது இயக்கத்தில் உருவாகி வரும் திரைப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. 

இந்த படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடிக்கிறார். இதில் 3 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். மேகா ஆகாஷ், தெலுங்கு நடிகை சாந்தினி மற்றும் மலையாள நடிகை கார்த்திகா முரளிதரன் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

பள்ளி, கல்லூரி மற்றும் கல்லூரிக்கு பிறகான வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்தப் படத்தில் ஒவ்வொரு பருவத்திலும் ஒரு ஹீரோயின் நடிக்க இருக்கின்றனர். 

ஏற்கனவே, அசோக் செல்வன் நடிப்பில் வெளியான நித்தம் ஒரு வானம், ஓ மை கடவுளே மற்றும் மன்மதலீலை உள்ளிட்ட படங்களில் அவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கதாநாயகிகள் ஹீரோயினாக நடித்துள்ளனர். தற்போது அவரது புதிய படத்திலும் ஹீரோயினாக மூன்று பேர் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ashok Selvan has 3 Heroine in his movie


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->