நிதியமைச்சரின் அறிக்கையில் எக்கச்சக்க குளறுபடிகள்.? போட்டுடைத்த அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் ஜிஎஸ்டி நிலுவை தொகை மொத்தமாக அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை, "தமிழகத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய அனைத்து நிலுவைத் தொகைகளும் வழங்கப்பட்டுவிட்டது  திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பாஜக அரசை எப்படி குறை சொல்லலாம்.?

9 கோடிப் பேர் பயன்படுத்துகின்ற உஜ்வாலா சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறைய மக்கள் பயனடைந்து இருக்கின்றனர்.
 தமிழக நிதியமைச்சர் 4.07 சதவீத நிதி பகிர்வு வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். 

தமிழக அரசுக்கு 39,750 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால், இது குறித்து தமிழகத்தின் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசத்தை விட தமிழகத்தில் டீசல் மற்றும் பெட்ரோலின் விலை அதிகரித்திருக்கிறது. 

ஜிஎஸ்டிக்கான கவுன்சில் நடை பெற்ற பொழுது ஏகமனதாக 56 பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகுதான் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. தமிழக நிதி அமைச்சரின் அறிக்கையை நேற்று வெளியிடப்பட்டது. இதில், முன்னுக்குப் பின் முரணாக பல விஷயங்கள் இருந்தது." என்று தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai about GST Counsil


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->