அதையும், இதையும் வீடியோ போட்டு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்களை குவிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் சின்னத்திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நடன நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக நிறைய ரசிகர் பட்டாளத்தை பெற்றவர்தான் ஆலியா மானசா. இதன்பின்னர் விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இவர் நடித்த செம்பா கதாபாத்திரம் மிகப்பெரிய வைரல். 

சமூகவலைதளங்களில் இந்த கதாபாத்திரம் குறித்து மீம்ஸ்கள் போடப்பட்டதால் ஆலியா மானசா பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்தார். இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவினை ஆலியா காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு அழகான குட்டி மகள் இருக்கின்றார். 

தற்போது நடிகர் சித்துவுக்கு ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக ஆலியா மானசா நடித்து வருகிறார். அதில் மிகவும் பிற்போக்குத்தனமான மாமியாருடன் ஐபிஎஸ் அதிகாரியாக போகும் ஆலியா மானசா அனுபவிக்கும் கொடுமைகள் போன்றவை இல்லத்தரசிகளுக்கு மிகவும் சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கும். 

இந்த நிலையில், தற்போது நடிகை ஆலியா மானசா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் பக்கத்தில் கிச்சன் டூர், பிரிட்ஜ் டூர், கார் டூர் என்று அனைத்து அறைகளையும் வீடியோவாக போட்டு அன்றாடம் அவர்களை அதிகரித்து வருகிறார். அவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5.1 மில்லியன் பார்வையாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Alya manasa gets 5.1 m followers


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->