கம்பேக்கிற்காக வெறித்தனமான முயற்சியில் இறங்கிய ஆலியா மானசா.! வைரல் வீடியோ.! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகையான ஆலியா மானசா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ராஜா ராணி சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். அந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவினை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். மகள் பிறந்த பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார். பின்னர் அவர் இரண்டாவது முறை கர்ப்பம் தரித்ததால், அந்த சீரியலில் இருந்து விலகினார்.

இரண்டாவது பிரசவத்திற்க்கு பின் மீண்டும் ஆலியா மானசா சீரியலில் நடிக்க வருவதாக சமீப காலமாக தகவல் வெளியாகி கொண்டு இருக்கிறது. இதுவரை விஜய் தொலைக்காட்சியில் நடித்து வந்த ஆலியா மானசா இனி சன் டிவியில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

விஜய் டிவியில் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த ஆலியா அந்த தொலைக்காட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர். அப்படி இருக்க, அவர் திடீரென சன் டிவிக்கு தாவி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இத்தகைய சூழலில் அவர் தனது கம்பேக்கிற்காக வெறித்தனமாக வொர்க்கவுட் செய்துள்ள வீடீயோ இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aliya manasa workout for came Back


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->