அஜித் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. 'விடாமுயற்சி' திரைப்படம் குறித்த அசத்தல் தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அஜித்குமார். இவர் கடைசியாக துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் அஜித் குமார் நடிக்க உள்ள 62வது திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளார். இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

நடிகர் அஜித் குமாரின்  62வது படத்திற்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா அல்லது த்ரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த  நிலையில் விடாமுயற்சி திரைப்படம் குறித்த அசத்தலான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith in vidamuyarchi movie shooting starts from July end or August


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->