மீண்டுமொரு முறை ஜி.பி.முத்துவிடம் பல்பு வாங்கிய கமல்.! வைரலாகும் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதனால், தான் பிக் பாஸ் சீசன் 5 முடிந்து. ஆறாவது சீசன் வரை வந்துள்ளது. எப்போது 6 வது சீசன் ஆரம்பிக்கும் என்று காத்திருந்த நிலையில், அக்டோபர் ஒன்பதாம் தேதி பிக் பாஸ் தொடங்கியது. 

கடந்த 3 சீசன்களுக்கும் மேலாக ஜிபி முத்து பிக் பாஸில் இடம் பெறுவார் என்று உத்தேச பட்டியலில் கூறப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சீசன்களில் எல்லாம் அவர் இடம்பெறவில்லை. இந்த முறை அவர் பிக் பாஸ் வீட்டில் அடி எடுத்து வைத்துள்ளார். அவர் வந்த நாள் முதலே கமல் முதற்கொண்டு அனைத்து போட்டியாளர்களும் அவரை கலாய்த்து வருகின்றனர். 

அவரது வெகுளித்தனமான பேச்சு ரசிகர்களை கவர்கிறது. இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜி.பி.முத்துவின் ஒவ்வொரு செயல்பாடும் ரசிகர்களை கவரும் விதமாக இருக்கிறது.

அவரது வெள்ளந்தியான குணம் மற்றும் எதற்காகவும் தனது இயல்பை மாற்றிக் கொள்ளாத நேர்மை உள்ளிட்டவை அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்துள்ளது. அவருக்கு எதிராக செயல்படும் தனலட்சுமி, ஆயிஷா உள்ளிட்டோர் மீது ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் வார இறுதியில் கமல் இன்று போட்டியாளர்களை வீடியோ மூலமாக சந்திக்கிறார். வீட்டிற்கு வந்த முதல் நாளே ஆதாம் பற்றி ஜிபி முத்துவிடம் கமல் பேச ஜி.பி.முத்துவுக்கு ஆதாம் என்றால் யார் என்றே தெரியவில்லை. இதனால் கமலே ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டார். 

இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது. இத்தகைய சூழலில், தற்போது மீண்டும் வார இறுதியில் ஆதாம் குறித்து கமல் பேச அதற்கு ஜி.பி. முத்து மீண்டும் ஆதாமா என்று ஆரம்பத்தில் இருந்து ரியாக்ஷன் கொடுக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

again kamal speech with gp muthu about aadham


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->