சினிமாவில் பாலியல் தொல்லை.. ஓபனாக பேசிய சுருதிஹாசன்.. அதிரும் கோலிவுட்.!  - Seithipunal
Seithipunal


சூர்யாவின் ஏழாம் அறிவு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் நடிகை சுருதிஹாசன். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாவில் ஆணாதிக்கம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சுருதிஹாசன்," சினிமா துறையில் ஆணாதிக்கம் அதிகமாக இருக்கிறது. தமிழ் பெண்கள் சினிமா துறைக்கு வர யோசிப்பது குறித்து ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 ஆணாதிக்க சிந்தனையில் தமிழ் சினிமா இயங்குவதால் தான் அவர்கள் பாலியல் தொந்தரவு செய்கின்ற சூழல் சாதாரணமாக பார்க்கப்படுகிறது. இதை அனைத்தையும் மீறி பெண்கள் சாதிக்க வேண்டி இருக்கிறது. வாரிசு நடிகர்களுக்கு எளிதில் வாய்ப்பு கிடைக்கும் என்று அனைவரும் நினைக்கின்றனர்.

 இந்த தொழில் துறையில் நுழைய வேண்டுமானால் பெற்றோர்கள் காரணமாக இருக்கலாம். ஆனால் சொந்த திறமை இருந்தால் மட்டும்தான் சினிமா துறையில் முன்னேற முடியும். நான் எனது சொந்தக் காலில் நிற்கிறேன். சமீப காலமாக நான் நடிக்கிற படங்களில் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளன. தமிழ் சினிமாவில் மட்டுமல்ல சமுதாயத்திலும் ஆணாதிக்கம் நிறைந்த தான் இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress shruthihassan about patriotic mentality


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->