திரைத்துறையில் இத்துணை வருடங்கள் இருப்பதற்கு இது ஒன்றுதான் காரணம்.! ரகுல் ப்ரீத் சிங் ஓபன் டாக்.!! - Seithipunal
Seithipunal


திரையுலகில் கொடிகட்டி பறக்கும் சில நடிகைகளிடம் அவர்களின் திரையுலக வாழ்க்கை மற்றும் அழகிய கட்டுக்கோப்பான உடல் குறித்த கேள்விகளை கேட்டால்., அவர்களின் தின செயல்களை குறிப்பிட்டு நம்மை வியப்பில் ஆழ்த்துவது வழக்கம். இது ரசிகர்களுக்கும் நல்ல உற்சாகத்தை ஏற்படுத்தும். அந்த வகையில்., நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்தது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்துகிறது.

நான் அதிகளவு உடற்பயிற்சி கூடத்தில் இருப்பதை அதிகளவு விரும்புவேன்., நாளொன்றுக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சியை மேற்கொள்ளுவேன். ஹிந்தி மொழியில் நடித்த ஒரு திரைப்படத்திற்க்காக 45 நாட்களில்., உடலின் எடையை 8 கிலோ அளவிற்கு விரைவாக குறைத்தேன். உடலுக்கு சத்துக்களை வழங்கும் உணவுகளை அதிகளவு சாப்பிடுவேன். 

தினமும் உடற்பயிற்சியை துவங்குவதற்கு முன்னதாக காபியில் ஒரு தே.கரண்டி அளவிற்கு நெய்யை சேர்த்து., காபியை புல்லட் காபியாக மாற்றி அருந்துவேன். இன்றுள்ள பெரும்பாலான இளம் தலைமுறையிடம் அரசியல் ஆர்வமானது அதிகளவில் உள்ளது. இதன் காரணமாகவே., தற்போது நடந்து முடிந்த தேர்தலில் வாக்குப்பதிவுகளின் விகிதம் வெகுவாக அதிகரித்தது. 

இளம் தலைமுறையினர் அரசியலின் மீது நல்ல புரிதல் மற்றும் சமூக அக்கறையை கொண்டு அரசியலுக்கு வந்து., அதிகளவு பிரச்சனையை சரி செய்ய இயலும். கடந்த ஆறு வருடங்களாக தொடர்ந்து திரைத்துறையில் நீடிப்பதற்கு நான் மட்டும் தான் திரைத்துறையின் அதிபதி என்ற கர்வம் என்னுள் இல்லாதது தான் காரணம். தான் என்ற தலைக்கனம் இருந்தால் அவர்களுக்கு அழிவு நிச்சியம். 

எனது திரைப்படத்திற்கு ரசித்தார்கள் ஆதரவு அளிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. திரைத்துறையில் திரைக்கு பின்னால் நாங்கள் படும் இன்னல்கள் யாருக்கும் தெரிவதும் இல்லை., அவர்கள் அதனை எண்ணுவதும் இல்லை., நல்ல திரைப்படங்களை ரசிகர்களுக்கு வழங்குவதற்காக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன் என்று குறிப்பிட்டார். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress ragul preeth Singh speech about her film industry life


கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
Seithipunal