வார்ரே வா... நயன்தாராவை தொடர்ந்து தாயாக போகும் பிரபல நடிகை.!  - Seithipunal
Seithipunal


சினிமா உலகில் காதலித்து மணமுடித்த நட்சத்திர ஜோடிகளின் பிரபலமானவர்கள் தான் நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் ஆதி ஜோடிகள். இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஒரு சில படங்களில் நடித்து இருக்கின்றனர். 

அவ்வாறு நடித்த போது இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டு இருக்கின்றது. கடந்த மே மாதத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த உடனேயே இருவரும் ஹனிமூனுக்காக பாரிஸ் பகுதிக்கு சென்றனர். இருவரும் அங்கே ஊர் சுற்றியபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். 

சமீபத்தில் தான் இருவரும் தல தீபாவளி கொண்டாடும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர். இத்தகைய நிலையில் நடிகை நிக்கி கல்ராணி தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

விரைவில் தாய் தந்தையாக மாற இருக்கும் இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இது பற்றி ஆதி மற்றும் நிக்கி கல்ராணி தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress nikki kalrani may pregnant


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->