சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா.. வெளியான அசத்தல் தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நஸ்ரியா. இந்தப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை என்றாலும் தொடர்ந்து நஸ்ரியாவிற்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

அதன்படி ராஜா ராணி, வாயை மூடி பேசவும், பெங்களூர் நாட்கள், நையாண்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தனது இயல்பான நடிப்பாலும், வெகுளியான பேச்சாலும் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். மேலும் தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்தார்.

இதனிடையே மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா சினிமாவில் இருந்து விலகியிருந்தார். 

இந்த நிலையில் தற்போது மீண்டும் நஸ்ரியா சினிமாவில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குனர் ஏ.எல்விஜய் இயக்கத்தில் வெப் சீரிஸ் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress nazriya return to cinema


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->