பிக்பாஸ் பிரபலத்துடன் இணையும் நடிகை லட்சுமி மேனன்! - Seithipunal
Seithipunal


நெடுஞ்சாலை திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆரி. பிறகு பிக் பாஸில் பங்கேற்று மிகவும் பிரபலமானார். 

இதனை தொடர்ந்து ஆரி, உதயநிதி ஸ்டாலின் உடன் நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான சேரனின் பயணங்கள் என்ற இணைய தொடர் வெற்றி பெற்ற பிறகு புதிய படத்தில் நடிகை லட்சுமி மேனனுடன் இணைந்துள்ளார். 

நடிகை லட்சுமி மேனன் இறுதியாக சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்த நிலையில் மோசமான விமர்சனங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பாக ஆரி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சேரன் பயணங்கள் வெற்றிப் பிறகு லட்சுமி மேனனுடன் இணைந்துள்ளேன். 

மெட்ராஸ் டேக் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிட் தயாரிக்கும் முதல் படத்தை இயக்குனர் ராஜசேகரன் பாண்டி இயக்குகிறார். உங்களது அன்பினையும் ஆதரவினையும் வேண்டிக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Lakshmi Menon joins Bigg Boss celebrity


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->