தனது காதலரை அறிவித்த நடிகை ஹன்சிகா மோத்வானி.. டிசம்பரில் திருமணம்.! - Seithipunal
Seithipunal


தமிழில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான நடிகர் தனுஷ்க்கு  ஜோடியாக மாப்பிள்ளை மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஹன்சிகா மோத்வானி.

அதனைத் தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

தற்போது இவருடைய நடிப்பில் 105 மினிட்ஸ், பார்ட்னர், மை நேம் இஸ் ஸ்ருதி, ரவுடி பேபி உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான மஹா எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. தமிழிலும் தற்போது இவருக்கு வாய்ப்புகள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா சோஹல் கதுரியாவை காதலிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும், டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. 

மேலும், இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ள அந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் எனவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress hansika motwani announce relationship


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->